''ரணிலுக்காக நாங்கள் வீதிக்கு இறங்கவில்லை.." நாமல், ஹிருணிகா விளக்கம்


எதிர்கால அரசியல் திட்டமிடலுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்காக நாங்கள் ஒன்றினையவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்த அவர்,


ஆட்சியில் உள்ள தரப்பு எதிர்க்கட்சிக்கு சென்றவருடன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளுக்காக முன்னிலையாகுவது இலங்கையின் அரசியல் கலாசாரம். நாங்கள் யாரையும் பழிவாங்கவில்லை. இனியும் பழிவாங்க போவதில்லை

பெரும்பான்மை அதிகாரம் உள்ளதால் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது.
இலங்கை அரசியல் வரலாற்றில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர்தான் அரசியல் பழிவாங்கல்களாக பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.
ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.இன்று ஆட்சியில் இருப்பவர்கள் எதிர்காலத்தில் எதிர்கட்சிக்கு செல்லலாம்.ஆனால் ஜனநாயகம் என்றும் உறுதியாக பேணப்பட வேண்டும் என்றார்.



இதேநேரம்  கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து  தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர

நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரச்சினை ரணில் விக்கிரமசிங்க என்ற தனிநபருடன் மாத்திரம் தொடர்புடையதல்ல.
இன்று அவருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நாளை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படலாம்.
இது அரசியல் பழிவாங்கல் என்பதை உணர்ந்து கொண்டுள்ளதால் தான் மக்கள் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருக்கின்றனர்  

அவர் என்று ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுகின்றாரோ அதன் பின்னர் மேற்கொள்ளும் விஜயமே தனிப்பட்ட விஜயமாகக் கருதப்படும்.
எமக்கிடையிலான அரசியல் கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் அவ்வாறே உள்ளன.
அவற்றில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால் இன்று நாம் கூடியிருப்பது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துக்காகும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மையல்ல என நீரூபிக்கப்பட்டால் அரசாங்கத்தின் நிலைமை என்ன? என அவர் கேள்வியெழுப்பினார்.